LOADING...
விஜய்-ரஷ்மிகா திருமண வைபவம்: 'சங்கீத்' உடன் தொடங்கியது
இந்த நிகழ்வில் திரையுலகை சேர்ந்த குறிப்பிடத்தக்க விருந்தினர்கள் கலந்து கொண்டனர்

விஜய்-ரஷ்மிகா திருமண வைபவம்: 'சங்கீத்' உடன் தொடங்கியது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2026
01:22 pm

செய்தி முன்னோட்டம்

வியாழக்கிழமை உதய்பூரில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் சங்கீத் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரையுலகை சேர்ந்த குறிப்பிடத்தக்க விருந்தினர்கள் கலந்து கொண்டனர், மேலும் விஜய் தேவரகொண்டாவின் நண்பர்கள் நடனமாடினர். கூடுதலாக, விழாவின் போது ராஷ்மிகா மந்தனா தனது மாமியாரிடமிருந்து பாரம்பரிய வளையல்களை பெற்றார்.

சிறப்பம்சங்கள்

'சங்கீத்' விழாவில் என்ன நடந்தது?

"சங்கீத் விழாவின் போது விஜய்யின் தாயார் ராஷ்மிகாவுக்கு பாரம்பரிய வளையல்களை அன்பளிப்பாக வழங்கினார். இது ஏற்றுக்கொள்ளுதல், அன்பு மற்றும் குடும்ப பாரம்பரியத்தை குறிக்கிறது," என்று தம்பதியினருக்கு நெருக்கமான ஒருவர் இந்தியா டுடேவிடம் தெரிவித்தார். ஜூம் தகவலின்படி, உதய்பூரில் உள்ள ஐடிசி மெமென்டோஸ் ஹோட்டலில் நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் இந்த ஜோடி கீதா கோவிந்தம் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலுக்கு நடனமாடியது. அதுவே அவர்கள் இணைந்து நடித்த முதல் படம் என்பது கூடுதல் சிறப்பு. விரோஷ் பிரீமியர் லீக் எனப்படும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஒரு நட்பு கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்த சங்கீத் நடந்தது.

Advertisement