
'லைக் போட்டது குத்தமாயா?!': விக்னேஷ் சிவனை வறுக்கும் நெட்டிஸன்கள்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று ஒரு டீவீட்டிற்கு லைக் போட்டதற்கு, இணையத்தில் நெட்டிஸன்கள் அவரை வைத்து செய்து வருகின்றனர்.
இதில் நொந்து போன விக்னேஷ் சிவன் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டும் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் ட்ரைலர் சென்ற வாரம் வெளியானது.
அதில் இடம்பெற்ற ஒரு வசனம், பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இருந்தது. அது பலத்த கண்டனத்தை ஈர்த்தது.
இதுகுறித்து திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், "நடிகர் விஜய்க்கும் அந்த வார்த்தைக்கும் எந்த தொடர்புமில்லை. அந்த வார்த்தையினால் யாராவது மனம் புண்பட்டிருந்தாலோ, கண்டனத்தை தெரிவித்தாலோ அதற்கு நான் தான் முழு பொறுப்பு"எனக் கூறியுள்ளார்.
card 2
விஜய்க்கும் லோகேஷிற்கும் மனக்கசப்பு?
இந்த உரையாடலை தொடர்ந்து லோகேஷ் கனகராஜிற்கும், விஜய்க்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக ஒரு வீடியோ எக்ஸ்-இல் வெளியானது.
அதை விக்னேஷ் சிவன் லைக் செய்திருந்தார்.
இதை கண்டுகொண்ட விஜய் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும், அதை வைரலாக்கினார்.
அதன் பின்னர் சுதாரித்து கொண்ட விக்னேஷ் சிவன், தற்போது தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், 'விஜய் ரசிகர்களே, லோகி ரசிகர்களே..வீடியோவையும் அதில் கூறப்பட்டிருந்த செய்தியையும் பற்றி முழுவதுமாக படிக்காமல், லோகி என்ற பெயரை பார்த்ததும் லைக் போட்டுவிட்டேன். ஏன் என்றால், நான் அவருடைய மற்றும் அவரின் படங்களின் தீவிர ரசிகன் எந்த ஒரு விஷயத்தை பற்றியும் முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் ரியாக்ட் செய்ததற்கு மன்னித்துக்கொள்ளவும்" என நொந்து போய் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
விக்னேஷ் சிவனின் தன்னிலை விளக்கம்
Dear Vijay sir fans , Loki fans … sorry for the confusion 🙏 without even seeing the msg , the context or the content of the video or the tweet , by jus seeing Loki’s interview I liked the video !
— VigneshShivan (@VigneshShivN) October 8, 2023
cos am a big fan of his works and his interviews and the way he speaks !
Am also… https://t.co/JIJymxI2mJ