
வெற்றிமாறனின் விடுதலை 2 ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
சூரி கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்து கடந்தாண்டு வெளியான திரைப்படம் விடுதலை.
இப்படத்தின் 2ஆம் பாகத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நேரத்தில், அதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி, வரும் டிசம்பர் 20ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வெற்றிமாறன் இயக்கி, இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் விடுதலை 1 இன் தொடர்ச்சியாகும்.
பி.ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அழுத்தமான இரண்டு பகுதி கதையாக மாற்றி இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.
முதல் பாகத்தில் 'வாத்தியார்' விஜய் சேதுபதியின் அறிமுகத்துடன் படம் நிறைவுற்ற நிலையில், இரண்டாம் பாகத்தில் அவரின் பிளாஷ் பேக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.
இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Viduthalai திரைப்படக் குழுவினர், படம் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளனர். முதல் பாகத்தின் முடிவில் ஒளிபரப்பப்பட்ட இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. pic.twitter.com/hdGZHttMjB
— Cineversal Studios (@CineversalS) August 29, 2024