பிரபுதேவாவுடன் ஒர்க் அவுட் செய்யும் ரஜினிகாந்தின் மகள்; வைரல் ஆகும் வீடியோ
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஒரு உடற்பயிற்சி விரும்பி என அவரின் சமூக வலைதள பக்கத்தை பின்தொடர்பவர்கள் அறிவார்கள். அவர் நேற்று வெளியிட்டு இருந்த ஒரு வீடியோ, தற்போது வைரல் ஆகி வருகிறது. நடிகர்- நடன இயக்குனர் பிரபுதேவாவுடன் அவர் ஒர்க் அவுட் செய்வது போல ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இருவரும், ஷட்டில் காக் விளையாடியதாகவும், பின்னர் பிரபுதேவா, தன்னுடன் இணைந்து சில உடற்பயிற்சிகளை பயிற்றுவித்ததாகவும், தங்களுக்குள் ஒரு அண்ணன்-தங்கை பாசம் உருவாகி உள்ளதாகவும் ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார். அதோடு, பிரபுதேவாவை 'rubber man' எனவும் குறிப்பிட்டுள்ளார். ஐஸ்வர்யா தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.