18 வருடங்கள் கழித்து மோதப்போகும் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்?ரசிகர்கள் உற்சாகம்!
செய்தி முன்னோட்டம்
தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் படங்கள் பற்றி, இப்போதே செய்திகள் உலா வர தொடங்கி விட்டன.
தற்போது படப்பிடிப்பில் மும்மரமாக இருக்கும் நட்சத்திர படங்களான ரஜினிகாந்தின் ஜெயிலரும், கமலின் இந்தியன் -2ம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமென்று இப்போதே யூகிக்க தொடங்கி விட்டன ஊடகங்கள்.
அப்படி அந்த இரண்டு படங்களும் வெளி வந்தால், 18 வருடங்கள் கழித்து ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் மோதிக்கொள்ளும் நாளாக அது அமையும்.
காரணம், 18 வருடங்களுக்கு முன்னர், ஏப்ரல் 14 -ஆம் தேதிதான், சந்திரமுகியும், மும்பை எக்ஸ்பிரஸ்சும் வெளியானது. அதன் பிறகு இந்த இருபெரும் நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் ஒரே நாளில் வெளியாகவில்லை.
எனினும், படத்தின் ரிலீஸ் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
ரஜினி-கமல்
ஜெயிலர் vs இந்தியன் 2
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில், சிவ ராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சுனில், தமன்னா, வசந்த் ரவி மற்றும் யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும், இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் ஜைசால்மரில் நடைபெற்றது.
மறுபுறம், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ்சுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ஆகியோருடன் மறைந்த நடிகர் விவேக்கும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கும் இசை அனிருத்.