
நடிகர் விஜய் வீட்டின் முன்பு கண்ணீர் மல்க நின்ற பள்ளி மாணவி!
செய்தி முன்னோட்டம்
காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி, நடிகர் விஜய் வீட்டின் CCTV கேமரா முன்பு அழுது புலம்பிய வீடியோ ஒன்று, சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில், ஒரு பிஞ்சு குழந்தை, விஜய்யை நேரில் காண வேண்டும் என அடம்பிடித்ததும், அவரிடம், விஜய் வீடியோகாலில் பேசிய சம்பவமும் வைரலானதையடுத்து, இந்த பள்ளி மாணவியும், அவரது குடும்பத்தாரும், ECR ரோட்டில் அமைந்துள்ள விஜய் வீட்டின் முன்பு வந்து, CCTV கேமரா முன்னர் அழுது புலம்பி, அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
"அந்த குழந்தைகிட்ட வீடியோகால் பேசினது போல, எங்ககிட்டையும் பேசுங்க" என டயலாக் வேறு!
மூன்று நாள் விடுமுறைக்காக ECR ரோட்டிற்கு சுற்றுலாவிற்கு வந்த இடத்தில், இப்படி அட்ராசிட்டி செய்துள்ளது இந்த குடும்பம்!
ட்விட்டர் அஞ்சல்
பள்ளி மாணவியின் கோரிக்கை
நடிகர் விஜய் வீட்டு சிசிடிவி கேமரா முன்னால் நின்று கண்ணீர் மல்க பள்ளி மாணவி கோரிக்கை#Vijay | #Thalapathy | #VijayFan pic.twitter.com/b9TUeOuwvA
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 17, 2023