விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஓவர்; பொங்கலுக்கு படம் ரிலீஸ்; லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், படம் குறித்த முக்கிய அப்டேட்டை படத்தை தயாரிக்கும் லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தில், அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பில் தொகுப்பாளினி ரம்யா படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வந்தது. இதற்கிடையே, நேற்று விடாமுயற்சி படத்தின் வெளிநாட்டு முன்பதிவு துவங்கியது. இந்நிலையில், படத்தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ள அறிவிப்பில், படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.