விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
நடிகர் அஜித்குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'. மகிழ் திருமேனி இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. இப்படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் இதில் வில்லன்களாக நடித்துள்ளனர். அவர்களை தவிர, நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முக்கிய காட்சிகள் அஸர்பைஜானில் படமாக்கப்பட்டது. அங்கே நிலவிய கடும்குளிரினால், கடந்த டிசம்பர் மாதம், படக்குழுவினர் தமிழ்நாடு திரும்பினார். விடாமுயற்சி பற்றி வேறு எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில், தற்போது விடாமுயற்சியின் மற்றொரு போஸ்டர் வெளியாகி உள்ளது.