கமலா தியேட்டரில் தி கோட் படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க வந்த வெங்கட் பிரபு
நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் படம் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களிடையே படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு சென்னையின் பிரபல தியேட்டர்களில் ஒன்றான கமலா தியேட்டரில் தி கோட் திரைப்படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளார். அவர் தியேட்டருக்குள் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே, நடிகர்கள் சிவகார்த்திகேயன், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.