"அப்பா -அம்மா பிரிவுக்கு ராதிகா தான் காரணம் என நினைத்தேன்": வரலட்சுமி சரத்குமார் உருக்கம்
செய்தி முன்னோட்டம்
தனது தந்தை சரத்குமார் மற்றும் தாய் சாயா தேவியின் விவாகரத்து குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான் மிதுன் தொகுத்து வழங்கும் ஒரு பாட்காஸ்ட் (Podcast) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், பல தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். வரலட்சுமியின் தந்தை சரத்குமார் மற்றும் தாய் சாயா தேவி 2000-ம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர். அதைத் தொடர்ந்து 2001-ல் சரத்குமார் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். தனது பெற்றோரின் பிரிவுக்கு ராதிகா தான் காரணம் என்று ஆரம்பத்தில் தான் தவறாகப் புரிந்துகொண்டு அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்ததாக அந்த பேட்டியில் வரலட்சுமி ஒப்புக்கொண்டார்.
மனமாற்றம்
வயது வந்ததும் ஏற்பட்ட தெளிவு குறித்து வரலக்ஷ்மி பகிர்ந்து கொண்டார்
வளர்ந்த பிறகுதான், பெற்றோரின் திருமண உறவில் ஏற்கனவே சிக்கல்கள் இருந்ததாலேயே அவர்கள் பிரிந்தார்கள் என்பதும், அதில் ராதிகாவுக்கு பங்கு இல்லை என்பதும் புரிந்ததாக அவர் கூறினார். "ஆண்ட்டி (ராதிகா) வந்ததால் தான் என் பெற்றோரின் திருமணம் முறிந்தது என நான் நினைத்தேன், ஆனால் அது உண்மையில்லை" என அவர் தெளிவுபடுத்தினார். மனநல ஆலோசனை (Therapy) மற்றும் வயது வந்த பின்னர் ஏற்பட்ட தெளிவிற்கு பிறகு, தனது தந்தையை மன்னித்து, கடந்த காலக் கசப்புகளை மறக்க அது உதவியதாக தெரிவித்தார். "இரண்டு நபர்களுக்கு இடையே ஒத்து வராதபோது பிரிவது தான் சிறந்தது என்பதை நான் உணர்ந்தேன். இப்போது அவர்கள் தனித்தனியாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்" என்றார்.