Page Loader
நடிகர் விஜயகுமார் வீட்டு திருமணம்; ஒதுக்கப்பட்ட வனிதா விஜயகுமார்
நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தாருக்கும், வனிதா விஜயகுமாருக்கும் மனக்கசப்பு நிலவி வருகிறது

நடிகர் விஜயகுமார் வீட்டு திருமணம்; ஒதுக்கப்பட்ட வனிதா விஜயகுமார்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 19, 2024
10:17 am

செய்தி முன்னோட்டம்

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தியும், அனிதா விஜயகுமாரின் மகளுமான தியாவின் திருமணத்திற்கு, நடிகை வனிதா விஜயகுமாரை யாரும் அழைக்கவில்லை என்பதை சூசகமாக பதிவிட்டு, அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பதிலையும் பதிவிட்டுள்ளார் வனிதா. நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தாருக்கும், வனிதா விஜயகுமாருக்கும் மனக்கசப்பு நிலவி வருகிறது. வனிதா விஜயகுமாரின் செயல்பாடுகள் அவர்களுக்கு பிடிக்காத காரணத்தால், அவர்கள் அனைவருமே வனிதாவை ஒதுக்கி வைத்துள்ளனர். வீட்டில் நடைபெறும் எந்த ஒரு விசேஷத்திற்கும், மொத்த குடும்பமும் ஒன்று கூடி கொண்டாடி மகிழும் நேரத்திலும், வனிதா அதில் எப்போதும் மிஸ்ஸிங்.

வனிதா விஜயகுமார்

பேத்தியின் திருமணத்திற்கும் அழைக்காத விஜயகுமார்

அந்த வகையில், விஜயகுமார்- முத்துக்கணு தம்பதியின் மகளான அனிதா விஜயகுமாரின் மகள் தியா திருமண வைபவங்களில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், அங்கும் வனிதா மிஸ்ஸிங். இந்நிலையில் வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சிங்கம் நடந்து வருவது போன்ற வீடியோவை பதிவிட்டு, ஒட்டுமொத்த கூட்டம் ஓர் இடத்தில் சேரும்போது நீங்கள் மட்டும் தனியா இருந்தால், நீங்கள் எவ்வளவு பலம் வாய்ந்தவர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என ஒரு வரியையும் பதிவிட்டுள்ளார் வனிதா. இது தன்னை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய குடும்பத்தினருக்கு சூசகமாக தெரிவிக்கும் பதில் என அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்