காதலர் தினம் 2023: ஜோடியாக கண்டுகளிக்க சில எவெர்க்ரீன் காதல் படங்களின் பட்டியல்
பிப்ரவரி 14-ஆம் தேதி, உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், நீங்கள், உங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களுடன் அமர்ந்து கண்டுகளிக்க சில எவெர்க்ரீன் காதல் படங்களின் பட்டியல் இதோ: மூன்றாம் பிறை: இயக்குனர் மஹேந்திரனின் அழகான படைப்பு இந்த படம். கமல்-ஸ்ரீதேவி நடித்துள்ள இந்த படத்தின் பாடல்களும் ஹிட். மௌன ராகம்: மணிரத்னத்தின் இந்த படைப்பு, பல இயக்குனர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. இந்த படத்தை தழுவி பல படங்கள் இன்றளவும் எடுக்கப்பட்டு வருகிறது. அலைபாயுதே: தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் ஹிட்டான படம். இதுவும் மணிரத்னத்தின் படைப்பே. இதயம்: காதலும் தியாகமும் ஒன்றோடரொன்று இணைந்தது என்பதை உணர்த்தும் படம். மறைந்த நடிகர் முரளியின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.
பார்க்காமலே காதல் முதல் வயதை தாண்டிய காதல் வரை
ரோஜா: திருமணத்திற்கு பிறகு காதல் என்று பேசும் இந்த படமும் மணிரத்னத்தின் படைப்பே காதல் கோட்டை: பார்க்காமலே காதல் என்ற காதல் டெம்ப்லேட்டின் முன்னோடி இந்த படம் சேது: பாலாவின் முதல் படைப்பு, விக்ரமின் சினிமா வாழ்க்கையின் திருப்பு முனை என்று கருதப்படும் படம் இது. காதலுக்கு மரியாதை: வழக்கமான காதல் படங்களை போல அல்லாமல், இது வித்தியாசமான படைப்பு. பாசில் இயக்கத்தில் விஜய், ஷாலினி இணைந்து நடித்த படம். விண்ணைத்தாண்டி வருவாயா: காதல், வயது வித்தியாசத்தை தாண்டி வருவது என்று பேசும் இந்த படம், இந்த காதலர் தினத்திற்கு ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. பண்ணையாரும் பத்மினியும்: காதலிக்க வயதில்லை என்று கூறும் இந்த படம், நிச்சயமாக ஒரு கிளாசிக் படம்.