
"39 ஆண்டுகளுக்கு பிறகும், அதே குரல், அதே கனிவு": பாடகி சித்ராவை பாராட்டிய கவிஞர் வைரமுத்து
செய்தி முன்னோட்டம்
நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்கர்பச்சான் இயக்கும் திரைப்படம், 'கருமேகங்கள் கலைகின்றன'. இந்த படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ். பாடல்களை எழுதுவது கவிஞர் வைரமுத்து.
அதில், ஒரு பாடலின் பதிவின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை, வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் எழுதிய பாடலை பாடுவது, 'சின்னக்குயில்' சித்ரா.
அப்போது உடனிருந்த வைரமுத்து, பாடகி சித்ராவின் பணிவையும், கனிவையும் சிலாகித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.
"39 ஆண்டுகளுக்கு பிறகும், அதே குரல், அதே கனிவு, அதே பணிவு" எனக்குறிப்பிட்டிருந்தார்.
வைரமுத்து வரிகளில், சித்ரா முதன்முதலில் பாடிய பாடல், 'பூஜைக்கேத்த பூவிது' என்ற பாடல் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
ட்விட்டர் அஞ்சல்
வைரமுத்து பதிவு
கருமேகங்கள் கலைகின்றன
— வைரமுத்து (@Vairamuthu) March 22, 2023
பாட்டுப் பதிவு
தங்கர்பச்சான் இயக்கத்தில்
ஜி.வி.பிரகாஷ் இசையில்
சித்ரா பாடிய முதல்பாட்டு
பூஜைக்கேத்த பூவிது;
நான் எழுதியது
39ஆண்டுகளுக்குப் பிறகும்
அதே குரல்; அதே கனிவு;
அதே பணிவு
நீங்களும் காணுங்கள்@gvprakash | @KSChithra | @thankarbachan pic.twitter.com/C4o8YJwclR