"கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்": துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கவிதை வெளியிட்ட வைரமுத்து
செய்தி முன்னோட்டம்
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில், சிரியாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள காசியான்டெப் என்ற நகரில் இரு தினங்களுக்கு முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 7.8 ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தில் பல்லாயிர கணக்கான மக்கள் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் விளைவாக, துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல நாடுகளும் விரைந்துள்ளன.
பல பிரபலங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார். அந்த வரிசையில், கவிப்பேரரசு வைரமுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கவிதை ஒன்றை எழுதி, தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
வைரமுத்து கவிதை
துருக்கியின் கீழே
— வைரமுத்து (@Vairamuthu) February 7, 2023
பூமி புரண்டு படுத்துவிட்டது
ரிக்டர் கருவிகள்
வெடித்துவிட்டன
வான்தொட்ட கட்டடங்கள்
தரைதட்டிவிட்டன
மனித உடல்கள் மீது
வீடுகள் குடியேறிவிட்டன
மாண்டவன் மானுடன்;
உயிர் பிழைத்தவன்
உறவினன்
உலக நாடுகள்
ஓடி வரட்டும்
கண்ணீர்
சிவப்பாய் வடியும் நேரம்#TurkeyEarthquake pic.twitter.com/yJGWZWJjqj