Page Loader
"அவருக்கு எதுவுமே ஆகாது என்று நினைத்தேன், ஆனால்...": விஜயகாந்த் உடல்நிலை குறித்து நடிகர் வாகை சந்திரசேகர்
நடிகர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து நடிகர் சந்திரசேகர் பேட்டி

"அவருக்கு எதுவுமே ஆகாது என்று நினைத்தேன், ஆனால்...": விஜயகாந்த் உடல்நிலை குறித்து நடிகர் வாகை சந்திரசேகர்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 31, 2023
04:31 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜயகாந்த், நடிப்பின் மீது கொண்ட ஆசையால், மதுரையிலிருந்து, மெட்ராஸ்-க்கு ஓடி வந்தவர். பல போராட்டங்களுக்கு பிறகு, ஒரு படத்தில் வில்லனாக அறிமுகமாகி, பின்னர் படிப்படியாக ஹீரோவாக உருமாறினார். கமல்-ரஜினி என்று இரு முனை போட்டி நிலவி வந்த வேளையில், மூன்றாவது மாற்று சக்தியாக வளர்ந்தவர் தான் விஜயகாந்த். கோலிவுட்டில் அவருக்கு எதிரிகளே இல்லை எனலாம். நடிகர் விஜயகாந்தும், வாகை சந்திரசேகரும், சம காலத்து நடிகர்கள் எனலாம். அரசியல் காலத்தில் வேண்டுமென்றால் எதிரெதிர் அணியாக இருக்கிறார்களே தவிர, சினிமா துறையை பொறுத்த வரையில், இருவருக்குள்ளும் பரஸ்பரம் நல்ல நட்பு உண்டு என்பதை கோலிவுட் வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.

விஜயகாந்த்

விஜயகாந்திற்கு ஏதோ நடந்திருக்கிறது என சந்திரசேகர் கருத்து

தற்போது நடிகர் விஜயகாந்த், உடல்நலம் குன்றி, வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடைக்கும் இந்த நேரத்தில், வாகை சந்திரசேகரின் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பேசிய அவர், "சிவாஜி, எம்ஜிஆர் போல், விஜயகாந்த்தும் காலத்துக்கும் வயதே ஆகாது என்றே நினைத்தேன். ஏனென்றால் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் அல்ல. கடுமையாக உழைத்த உடம்பு அது. எனவே அப்படியேத்தான் இருப்பார் என நம்பினேன்". "அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு நேரில் சென்று நான் சந்திக்கவில்லை. அவரை பார்த்து 10 வருடங்கள் ஆகின்றன. அவரது உடல்நிலை கெட்டுப்போனதற்கு காரணம் கெட்டப்பழக்கம்தான் என்கிறார்கள். ஆனால் அவரைவிட கெட்டப்பழக்கம் அதிகம் உள்ள நடிகர்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள். விஜயகாந்த்துக்கு வேறு என்னமோ நடந்துவிட்டது" என்றார்.