Page Loader
'மாமன்னன்' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைய இருக்கும் வடிவேலு, பகத் பாசில்

'மாமன்னன்' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைய இருக்கும் வடிவேலு, பகத் பாசில்

எழுதியவர் Sindhuja SM
Jan 01, 2024
04:56 pm

செய்தி முன்னோட்டம்

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் நடித்து, மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி, பலதரப்பட்ட வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மாறுபட்ட கதாபாத்திரத்தையும், மலையாள நடிகர் பகத் பாசிலின் வேறுபட்ட நடிப்பையும் பலர் பாராட்டி இருந்தனர். இந்நிலையில், பிரபலமான இந்த இரண்டு நடிகர்களும் ஒரு அறிமுக இயக்குநரின் திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 98வது படமான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்த புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சூப்பர் குட் பிலிம்ஸின் 98வது திரைப்படம்