Page Loader
பிறந்தநாளுக்காக 24 காரட் தங்க கேக் வெட்டிய 'தி லெஜண்ட்' பட நடிகை ஊர்வசி ரவுடேலா
24 காரட் தங்க கேக் வெட்டிய லெஜண்ட் பட நடிகை

பிறந்தநாளுக்காக 24 காரட் தங்க கேக் வெட்டிய 'தி லெஜண்ட்' பட நடிகை ஊர்வசி ரவுடேலா

எழுதியவர் Venkatalakshmi V
Feb 26, 2024
10:06 am

செய்தி முன்னோட்டம்

ஊர்வசி ரவுடேலா தனது 30வது பிறந்தநாளை பிப்ரவரி 25 அன்று கொண்டாடினார். அதற்காக நடந்த பிரமாண்ட கொண்டாட்டத்தில், 24 காரட் தங்க கேக்கை வெட்டி கொண்டாடினார். நடிகை ஊர்வசி ரவுடேலா, தமிழில் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமான 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் நாயகியாக அறிமுகமானார். இவர் ஏற்கனவே பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர். இந்த நிலையில், ஹிந்தியில் அவர் தற்போது நடித்துவரும் 'லவ் டோஸ் 2' என்ற திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால், அவர் வெட்டிய கேக் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டதாகும். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில்,'லவ் டோஸ் 2' திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் யோயோ ஹனி சிங்கும் உடன் இருந்தார்

ட்விட்டர் அஞ்சல்

24 காரட் தங்க கேக்