LOADING...
ரோஹினி திரையரங்கு விவகாரம்: கோலிவுட்டில் வலுக்கும் கண்டன குரல்கள்
ரோஹினி திரையரங்கு விவகாரம்: தொடர்ந்து வலுக்கும் கண்டன குரல்கள்

ரோஹினி திரையரங்கு விவகாரம்: கோலிவுட்டில் வலுக்கும் கண்டன குரல்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 31, 2023
12:39 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று (மார்ச் 30), சிம்பு நடித்த பத்து தல திரைப்படம், பலத்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியானது. அப்போது, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில், இந்த படத்தினை காண, நரிக்குறவ கூட்டத்தினை சேர்ந்தோர் சென்றதாக தெரிகிறது. அப்போது டிக்கெட்கள் இருந்தும் திரையரங்க நிர்வாகம் இவர்களை படத்தை காண அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. அது தமிழகம் எங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கோலிவுட் பிரபலங்கள் பலரும், தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். முதல் ஆளாக, இசையமைப்பாளர் GV பிரகாஷ், இந்த நடத்தையை வன்மையாக கண்டித்தார். பத்து தல படத்தின் நாயகியான பிரியா பவானிஷங்கரும், "அவங்க உடை தான் திரையரங்க நிர்வாகிகளுக்கு பிரச்சனைனா, அவர்கள் அறிய, அடைய வேண்டிய நாகரிகம் ரொம்ப தூரத்துல இருக்கு" என தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ம.நீ.ம கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காட்டம்

ட்விட்டர் அஞ்சல்

நடிகை பிரியா பவானிஷங்கர் கண்டனம்

ட்விட்டர் அஞ்சல்

விஜய் சேதுபதி கருத்து

ட்விட்டர் அஞ்சல்

இசையமைப்பாளர் GV பிரகாஷ் கண்டனம்