ரோஹிணி தியேட்டர் விவகாரம்: இன்றும் தொடர்கிறதா தீண்டாமை கொடுமை?தியேட்டர் உரிமையாளர்கள் அளித்த விளக்கம்
இன்று STR நடிப்பில், 'பத்து தல' திரைப்படம் வெளியாகியுள்ளது. காலை 8 மணிக்கு முதல் காட்சி என அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தை காண, சிம்புவின் ரசிகர்கள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கிற்கும் படையெடுத்தனர். அப்போது, சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் அவர்கள் கண்ட காட்சி, அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனே அதை படம் பிடித்து, இணையத்தில் வைரலாக்கினார். சென்னையில், முதல் நாள், முதல் ஷோவிற்கு பெயர்பெற்ற திரையரங்கம் ரோஹிணி தியேட்டர். காரணம், இங்கு B & C சென்டர் ஆடியின்ஸ் நிறைய வருவார்கள். அதனால், படத்தின் வெற்றியை கணிப்பதும் ஈஸி.
நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு?
நரிக்குறவ பெண்மணிக்கு அனுமதி மறுத்ததா ரோஹிணி தியேட்டர் நிர்வாகம்?
அந்த திரையரங்கில், நரிக்குறவ பெண்மணி ஒருவர், தனது பிள்ளைகளுடன், பத்து தல படத்தை காண வந்துள்ளார், அதற்கான டிக்கெட்டும் எடுத்துள்ளார். ஆனால், அவரை, திரையரங்கிற்குள் அனுமதிக்க முடியாது என கூறிய காட்சி வைரலானது. 'இது ஒரு தீண்டாமை செயல்' என இணையவாசிகள் கண்டிக்க துவங்கினர். இதனை தொடர்ந்து, தியேட்டர் நிர்வாகம், விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த திரைப்படத்திற்கு, அந்த பெண்மணி, டிக்கெட் எடுத்திருந்தாலும், இது U/A சான்றிதழ் பெற்ற படமாகையால், குழந்தைகளை அனுமதிக்க முடியாது என தான் நிர்வாகிகள் கூறியதாக குறிப்பிட்டுள்ளது. எனினும், கூடியிருந்த மக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த குடும்பத்தை, படம் பார்க்க அனுமதிதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதற்கான வீடியோ ஆதாரத்தையும் இணைத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.