Page Loader
19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம்
பத்து தல படத்திலிருந்து ஒரு ஸ்டில்

19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 30, 2023
01:40 pm

செய்தி முன்னோட்டம்

சிங்கப்பூர்-மலேஷியா நாடுகளில், தமிழ் திரையுலகித்தாருக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. அதனால் தான், கலை நிகழ்ச்சிகளாகட்டும், இசை நிகழ்ச்சிகளாகட்டும், முதலில் அவர்கள் தேர்வு செய்வது இந்த நாடுகளை தான். ஆனால், அது சிறிய நாடாகையால், அங்கு இருக்கும் திரையரங்குகளில் ஒன்றிரண்டில் மட்டுமே தமிழ் படங்கள் திரையிடப்படும். மற்ற மொழி திரைப்படங்களும் வெளியிட வேண்டி இருப்பதால், இந்த ஏற்பாட்டில் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால், தமிழ் மொழி படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், சிங்கப்பூரில், இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படமும், அஜித் பதித்த 'துணிவு' திரைப்படமும், அதிக திரையரங்குகளில் வெளியானது. தற்போது அதை தொடர்ந்து, சிம்பு நடித்துள்ள 'பத்து தல' திரைப்படமும், அநேக திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சிங்கப்பூர் திரையரங்க நிலவரம்