Page Loader
LCU -வில் லியோ! உதயநிதி டீவீட்டால் எகிறும் எதிர்பார்ப்பு
LCU -வில் லியோ! உதயநிதி டீவீட்டால் எகிறும் எதிர்பார்ப்பு

LCU -வில் லியோ! உதயநிதி டீவீட்டால் எகிறும் எதிர்பார்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 18, 2023
09:21 am

செய்தி முன்னோட்டம்

லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முதல் படம் தவிர்த்து, கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து LCU என்ற யூனிவெர்ஸ்-ஐ உருவாக்கினார். அவர் தற்போது விஜயை இயக்கியுள்ள LEO திரைப்படமும், அந்த வரிசையில் இணையுமா என ரசிகர்கள், இயக்குனரையும், தயாரிப்பாளரையும், படத்தில் பணிபுரிந்த அனைவரிடமும் கேட்டு துளைத்தெடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களோ, படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் தான் கூற வேண்டும் என மழுப்பலாகவே பதில் கூறி வந்தனர். இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு, தான் லியோ படத்தை பார்த்ததாக, எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், லியோ படம் LCU-வில் வரும் என்பது போல அவர் குறிப்பிட்டிருந்தது, தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

LCU -வில் லியோ!