அரபு நாடுகளில் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வேர்ஸ்' படத்தை வெளியிட தடை; ஏன் தெரியுமா?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகள், சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான 'Spider-Man: Across the Spider-Verse'-ஸை தடை செய்துள்ளது. செய்திகளின்படி, அந்த படத்தில் இடம்பெறும் திருநர் கதாபாத்திரம் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'குவென் ஸ்டேசி' கதாபாத்திரம், ஒரு திருநர் கதாபத்திரம் என்றும், அது அவர்கள் மத நம்பிக்கைக்கு எதிரானது என்பதால், அவ்வகை பாலினத்தார், அரபு நாடுகளில் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். சவுதி சினிமாவின் அறிக்கைபடி, 'இந்த அனிமேஷன் திரைப்படம், வளைகுடா பிராந்தியத்தின் சில பகுதிகளில் வெளியிடப்படாது. ஏனெனில் அது நடைமுறையில் உள்ள, சில கட்டுப்பாடுகளுக்கு முரணானது'. இந்த தடையை உள்ளூர் மக்கள் பலரும் எதிர்க்கின்றனர்