Page Loader
'அனிமல்' திரைப்படத்தை புகழ்ந்ததால் நடிகை த்ரிஷாவுக்கு குவியும் எதிர்ப்புகள் 
நடிகை த்ரிஷாவின் கருத்துக்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பவே அந்த பதிவை அவர் நீக்கிட்டார்.

'அனிமல்' திரைப்படத்தை புகழ்ந்ததால் நடிகை த்ரிஷாவுக்கு குவியும் எதிர்ப்புகள் 

எழுதியவர் Sindhuja SM
Dec 04, 2023
11:57 am

செய்தி முன்னோட்டம்

'அனிமல்' திரைப்படத்தை புகழ்ந்ததால், பிரபல தமிழ் நடிகை த்ரிஷாவுக்கு எதிர்ப்புகள் கிழம்பியுள்ளது. பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் மற்றும் நடிகை ரஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்த 'அனிமல்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இயக்குநர் சந்தீப் ரெட்டியின் முந்தைய படங்களான 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போலவே இந்த படத்தின் கதாநாயகன் கதாபாத்திரத்தையும் பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் வைத்திருந்த நடிகை த்ரிஷா, அனிமல் படத்தை "Cult! Pppppppaaaaaahhhhhhh" என்று வர்ணித்து கைதட்டடல்களுடன் பதிவிட்டிருந்தார். அதன் பிறகு, நடிகை த்ரிஷாவின் கருத்துக்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பவே அந்த ஸ்டேட்டஸை அவர் நீக்கிட்டார்.

டிஜியூன்

மன்சூர் அலிகான் விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசும் விமர்சகர்கள் 

எனினும், பெண்களுக்கு எதிரான திரைப்படங்களுக்கு நடிகை த்ரிஷா ஆதரவளிப்பதாக அவரை பலர் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில், சர்ச்சை பேச்சுக்கு பெயர் போன நடிகர் மன்சூர் அலிகான், லியோ திரைப்படத்தில் தனக்கு த்ரிஷாவுடன் படுக்கை அறை காட்சிகள் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தது பெரும் சர்சைக்குள்ளானது. அது பெண்களுக்கு எதிரான கருத்து என்று தெரிவித்த நடிகை த்ரிஷா, இனி மன்சூர் அலிகானுடன் இணைந்து நடிக்கப்போவதில்லை என்று கூறியிருந்தார். இந்த விஷயத்தில் பலரும் த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், 'அனிமல்' திரைப்படத்திற்கு நடிகை த்ரிஷா ஆதரவு தெரிவித்திருப்பது பெரும் விமர்சனங்களை பெற்று வருகிறது. "இவர் தான் ஒரு வாரத்திற்கு முன், பெண்களின் கண்ணியம் குறித்து பேசினாரா?" போன்ற த்ரிஷாவுக்கு எதிரான கருத்துக்களை விமர்சகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.