Page Loader
2023 இல் வெளிவர இருக்கும்  டாப் ஹீரோக்களின் படங்கள்
2023-ல் திரைக்கு வெளிவர இருக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள்

2023 இல் வெளிவர இருக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள்

எழுதியவர் Saranya Shankar
Jan 02, 2023
12:55 pm

செய்தி முன்னோட்டம்

2023 ஆம் ஆண்டில் பல எதிர்பார்ப்புகளுடன் அடியெடுத்து வைத்துள்ளோம். தமிழ் திரையுலகிற்கும் இந்த ஆண்டு ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும். ஏனென்றால், பல டாப் ஹீரோக்களின் படங்கள் இந்த வருடம் வெளிவர இருக்கின்றன. அவ்வாறு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாப் ஹீரோக்களின் படங்களை பின்வருமாறு பார்ப்போம். இந்த வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் படம் சூப்பர்ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படம் இந்த சம்மருக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் இந்தியன்-2. இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இது 1996-ல் வெளிவந்த இந்தியன் படத்தின் தொடர்ச்சியாகும்.

நட்சத்திரங்களின் படங்கள்

அடுத்தடுத்து வெளியாக இருக்கும் திரை நட்சத்திரங்களின் படங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வன் 2. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இது, 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 1-ஆம் பாகத்தின் தொடர்ச்சி ஆகும். விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு போட்டியாக பொங்கலுக்கு களமிறங்க போகும் படம் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், துணிவு ஆகும். ஹச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த இரண்டு படமும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.