நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்- முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய பிரமுகர்கள் மரியாதை
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96 வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் சிவாஜியின் மகன்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் உடன் இருந்தனர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி நடிகர் சிவாஜி கணேசன் இயற்கை எய்தினார்.