Page Loader
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் முதல் விடுதலை வரை, சூப்பர்ஸ்டார் பாராட்டிய படங்கள்
'விடுதலை' படக்குழுவினரை நேரில் பாராட்டிய ரஜினிகாந்த்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் முதல் விடுதலை வரை, சூப்பர்ஸ்டார் பாராட்டிய படங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 10, 2023
02:43 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில், சூரி நடிப்பில், வெற்றிமாறன் இயக்கிய படம் 'விடுதலை' சென்ற வாரம் வெளியானது. படம் வெளியான நாள்முதல், நேர்மறை விமர்சனங்களையும், பாராட்டையும் பெற்று வருகிறது. இளையராஜாவின் இசையில், பாடல்களும் வரவேற்பை பெற்றுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும், வெற்றிமாறனின் இயக்கத்தை பாராட்டி வரும் நிலையில், ரஜினிகாந்த், தற்போது 'விடுதலை' படத்தை பார்த்துள்ளார். அவருக்காக பிரத்யேகமாக பிரிவியூ தியேட்டரில் திரையிடப்பட்ட படத்தை கண்டுகளித்த 'சூப்பர்ஸ்டார்', அதன் பின்னர், படக்குழுவினரை அழைத்து பாராட்டினார். அதோடு மட்டுமல்லாமல், தனது சமூகவலைதள பக்கத்தில், படத்தை பாராட்டி ஒரு பதிவும் இட்டிருந்தார். ரஜினிகாந்த், தரமான திரைப்படங்களை மனதார வாழ்த்தும் பழக்கம் உடையவர் என்பது திரையுலகினருக்கும், அவரது ரசிகர்களும் அறிந்ததே. அப்படி, சூப்பர்ஸ்டார் கண்டு ரசித்து, பாராட்டிய சில படங்களின் பட்டியல் இதோ:

தமிழ் சினிமா

இளம் தலைமுறை இயக்குனர்களை பாராட்டும் ரஜினிகாந்த்

லவ் டுடே: இந்த படத்தை கண்டபிறகு, இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை வீட்டிற்கே வரவழைத்து பாராட்டினார் ரஜினிகாந்த். ரஜினிகாந்துடன் உரையாடியதை, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பிரதீப். விக்ரம்: 'விக்ரம்' படத்தை பார்த்தபிறகு, இயக்குனர் லோகேஷை நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த். சமீபத்திய செய்திகளின் படி, ரஜினிகாந்த், தனது அடுத்த படத்தின் இயக்குனராக லோகேஷை தேர்வு செய்துள்ளார் எனக்கூறப்படுகிறது. காந்தாரா: காந்தாரா படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டியை சமீபத்தில் ரஜினி சந்தித்துள்ளார். இதுகுறித்து, ரிஷப் ஷெட்டியும் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்: தேசிங் பெரியசாமி இயக்கிய இந்த படத்தில், துல்கர் சல்மான் நடித்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருந்த இந்த காதல் கதை பலராலும் பாராட்டப்பட்டது, ரஜினியையும் சேர்த்து.