LOADING...
'துணிவு' வில்லன் நடிகர் ஜான் கொக்கனின் வீட்டில் விசேஷம்
'துணிவு' வில்லன் நடிகர் வீட்டில் விசேஷம்

'துணிவு' வில்லன் நடிகர் ஜான் கொக்கனின் வீட்டில் விசேஷம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 10, 2023
01:47 pm

செய்தி முன்னோட்டம்

'துணிவு' படத்தின் வில்லன் நடிகர் ஜான் கொக்கேன். இவரின் மனைவி நடிகை பூஜா ராமசந்திரன். பூஜாவுக்கு சமீபத்தில் வளைகாப்பு நடத்தப்பட்டது. அதன் புகைப்படங்களை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். 'சர்பட்டா பரம்பரை', 'துணிவு' ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜான் கொக்கேன். இவர், SS மியூசிக்கின் VJ வான பூஜா ராமச்சந்திரனை 2019 இல் திருமணம் செய்துகொண்டார். பூஜா ராமச்சந்திரனும் ஒரு நடிகை ஆவார். 7ஆம் அறிவு', 'பீட்சா', 'நண்பேன்டா', 'காஞ்சனா 2' போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்திருந்தார். லாக் டவுன் காலத்தில் வெளியான 'அந்தகாரம்' படத்தில் முக்கிய வேடத்தில் தோன்றி இருந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு என தென் மொழி படங்கள் பலவற்றிலும் பூஜா நடித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் ஜான் கொக்கேனின் வீட்டில் விசேஷம்