புதுவையில் அதிகரித்த தியேட்டர் டிக்கெட் விலைகள்
செய்தி முன்னோட்டம்
கொரோனா காலகட்டத்தில், புதுச்சேரி மக்கள் நலன் கருதி, தியேட்டர் டிக்கெட் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டு விற்கப்பட்டது.
ரூ.120 டிக்கெட் ரூ.100-ஆகவும், ரூ.100 டிக்கெட் ரூ.75-ஆகவும் குறைக்கப்பட்டது.
இந்த நிலை சமீபம் வரை நீடித்தது.
இந்த நிலையில், டிக்கெட் கட்டணங்களை உயர்த்த அனுமதி கோரி, புதுவை அரசிற்கு, தியேட்டர்கள் நிர்வாகிகள் சங்கம் கோரிக்கை மனு அளித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று, புதுச்சேரி ஆட்சியர் வல்லவன், தியேட்டர் டிக்கெட் விலைகளை அதிகரிக்க அனுமதி அளித்துள்ளார்.
அவரின் உத்தரவின்படி, 3ம் வகுப்பு 60 ரூபாயாகவும், 2ம் வகுப்பு 100 ரூபாய் ஆகவும், முதலாம் வகுப்பு 130 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பால்கனி டிக்கெட் 170 ரூபாயாக உயர்ந்துள்ளது. பாக்ஸ் டிக்கெட் 160 ரூபாயிலிருந்து, 180ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
புதுவையில் அதிகரித்த தியேட்டர் டிக்கெட் விலைகள்
Cinema ticket prices have increased in #pondicherry & #karaikal pic.twitter.com/dDrRm9m43m
— Delta Bioscope (@deltabioscope) November 9, 2023