Page Loader
வெளியானது விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் தீம் பாடல் 
வெளியானது விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் தீம் பாடல்

வெளியானது விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் தீம் பாடல் 

எழுதியவர் Nivetha P
Sep 30, 2023
07:17 pm

செய்தி முன்னோட்டம்

'தமிழ்படம்' மூலம் இயக்குனராக அறிமுகமான சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தற்போது விஜய் அண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ரத்தம்'. இதில் மகிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்புகள் முடிந்து, தற்போது ரிலீஸுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்படம் வரும் 6ம்தேதி வெளியாகப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் கொலை, வன்முறை காட்சிகள் அதிகமுள்ளதால் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர், டீஸர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் 'போர் மொழியே வெல்லும்' என்னும் தீம் பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று மிக பெரிய ஹிட் அடிக்கும் என்று படக்குழு மிகுந்த நம்பிக்கையுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

தீம் சாங்