Page Loader
விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு 
இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையிடப்பட இருக்கிறது.

விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு 

எழுதியவர் Sindhuja SM
Jul 15, 2023
09:38 am

செய்தி முன்னோட்டம்

125 நாட்கள் தொடர்ந்த 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். நடிகர் விஜய், திரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத் போன்ற பெரும் நடிகர்களின் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையிடப்பட இருக்கிறது. இந்நிலையில், நேற்று லியோ திரைப்படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த லோகேஷ் கனகராஜ், "லியோ திரைப்பட படப்பிடிப்பு முடிவடைந்தது. 6 மாதங்களில் 125 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்தப் படத்திற்காக தங்களது ஆன்மாவுடன் உழைத்த நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி!" என்று தெரிவித்துள்ளார். மேலும், தனது உதவி இயக்குநர்களுடன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படைத்தையும் வெளியிட்ட அவர், "உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்!" என்று கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ட்விட்டர் பதிவு