வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா'
பொங்கலுக்கு வெளியாக இருக்கும், அஜித் நடிக்கும் துணிவு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் திரை உலக ரசிகர்களிடையே 'தல'யாக கொண்டாடப்படும் பெரும் நடிகர்களில் ஒருவர் தான் அஜித். வலிமை படத்திற்கு பிறகு இது அஜித்தின் அடுத்த படமாகும். H.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திர கனி உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அஜித்தின் 61வது படமான துணிவு ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாகும். நேர் கொண்ட பார்வை மற்றும் வலிமை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் மற்றும் அஜித் இணைந்து வெளிவரும் மூன்றாவது படம் இதுவாகும்.
துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள்
இப்படத்தின் இசைமைப்பாளர் ஜிப்ரான் ஆவார். இப்படத்தின் முதல் படலாக 'சில்லா சில்லா' பாடல் டிசம்பர் 9-ம் தேதியன்று வெளியாகி சமூகவலைத் தளங்களில் பட்டையை கிளப்பியது. இந்த பாடல் வைசாக் அவர்களின் வரிகளில், இசையமைப்பாளர் அனிருத் அவர்களால் பாடப்பெற்றது. இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகுமென போனி கபூர் அறிவித்திருந்த நிலையில், இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வந்திருந்தது. இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாவது படலாக 'காசேதான் கடவுளடா' என்ற பாடல் வெளியாகி, ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதுவரையில் இந்த பாடலை யூடியூபில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப் பட்டுள்ளது. இந்தப்பாடலில் மஞ்சுவாரியர் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.