'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இங்கிலாந்தில் வெளியாகிறது; 'பயங்கரவாதம் தோற்றுப்போனது' என இயக்குனர் ட்வீட்
மே மாதத்தின் துவக்கத்தில் வெளியான திரைப்படம், 'தி கேரளா ஸ்டோரி'. இந்த திரைப்படத்தை திரையிடக்கூடாதென அரசியல் தலைவர்களும், உளவு துறையும் எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, திரைப்படம் வெளியானது. ஒரு சில மாநிலங்களில், திரைப்படம் வெளியானதும், தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, இந்த திரைப்படத்தை வெளிநாடுகளில் வெளியிட முடிவெடுத்தனர். இங்கிலாந்திலும் மே-12ஆம் தேதி வெளியாக தயாராக இருந்த நேரத்தில்,பிரிட்டிஷ் போர்டு ஆஃப் ஃபிலிம் கிளாசிஃபிகேஷன்(பிபிஎஃப்சி) சான்றிதழைப் பெறத் தவறியதால், இந்த திரைப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. தற்போது இந்த பிரச்னை எல்லாம் முடிக்கப்பட்டு, திரைப்படம் வெளியாக போகிறது என படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் தெரிவித்தார். அவர் பதிவிட்ட ட்வீட்டில், "கிரேட் பிரிட்டனுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் வென்றீர்கள். பயங்கரவாதம் தோற்றது. உங்கள் ரியாக்ஷனுக்காக காத்திருக்கிறோம்" என்றார்.
இயக்குனர் ட்வீட்
Congratulations #GreatBritain . You won. Terrorism lost. Shall wait for your reaction. Oh... now British people shall watch the biggest revolution against terror... #TheKeralaStory.@adah_sharma @SiddhiIdnani pic.twitter.com/cQdpma95rB— Sudipto SEN (@sudiptoSENtlm) May 16, 2023
இந்த காலவரிசையைப் பகிரவும்