
ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு; மே 19 அன்று, மாமன்னன் சிங்கள் ரிலீஸ்
செய்தி முன்னோட்டம்
'வைகைப்புயல்' வடிவேலு தன்னுடைய 35 ஆண்டுகாலஅன்று திரை பயணத்தில், 'எல்லாமே என் ராசாவின் மனசிலே' படத்திலிருந்து பாட துவங்கினார்.
அதன் பின்னர், தேவா, யுவன், ஹாரிஸ் ஜெயராஜ் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார். இருப்பினும், ரஹ்மான் இசையில் பாடியதே இல்லை.
தற்போது அவர் உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கும் 'மாமன்னன்' படத்தில் அந்த மேஜிக் நடைபெற்றுள்ளது.
இது குறித்து ரஹ்மானே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
"நம்ம வைகைபுயல் வடிவேலுவுடன் ஒரு பாடலை பதிவு செய்தேன். அவர் எங்களை முழுவதும் சிரிக்க வைத்தார் மற்றும் எங்கள் ரெகார்டிங் செஷனை மிகவும் மறக்கமுடியாததாக ஆக்கினார்!" என குறிப்பிட்டார்.
அந்த பாடல், வரும் மே 19 அன்று வெளியாக போகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
மாமன்னன் முதல் பாடல்
#MAAMANNAN First single releasing on 19th May 🚀@Udhaystalin @mari_selvaraj @RedGiantMovies_ #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil pic.twitter.com/wdIXmX6BSH
— A.R.Rahman (@arrahman) May 17, 2023