Page Loader
தளபதி 68: விஜய்-வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி அறிவிப்பு வெளியானது
விஜய்-வெங்கட் பிரபு கூட்டணி அறிவிப்பு வெளியானது

தளபதி 68: விஜய்-வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி அறிவிப்பு வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
May 21, 2023
03:07 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த விஜயின் அடுத்தப்படத்தின் அறிவிப்பு, யாரும் எதிர்பாரா நேரத்தில், இன்று வெளியானது. இதை தளபதி விஜய்யே தனது ட்விட்டர் பகிர்ந்தது கூடுதல் சுவாரஸ்யம். ஏற்கனவே பலரும் யூகித்தது போல, விஜய் தனது 68-வது படத்திற்கு, வெங்கட் பிரபுவுடன் கை கோர்க்கிறார். இந்த படத்தை தயாரிக்கவிருப்பது AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின், அர்ச்சனா கல்பாத்தி. படத்திற்கு இசையமைக்கவிருப்பது, யுவன்ஷங்கர்ராஜா. இந்த படத்தின் அறிவிப்பை, ஒரு Crossword puzzle போன்ற அமைப்பில் அறிவித்தனர். இதனையடுத்து, படத்தின் கதை என்னவாக இருக்கும் என பலரும் யூகிக்க துவங்கிவிட்டனர். விஜய் தற்போது 'லியோ' படத்தின் ஷூட்டிங்கில் உள்ளார். லியோ படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் ஹைதராபாதில் நடைபெறும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post