
முதன்முறையாக ரஜினி நடிக்கப்போகும் கதாபாத்திரம்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
செய்தி முன்னோட்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கப்போவதாக சென்ற மாதம் அறிவிப்பு வெளியானது.
அது ரஜினிகாந்தின் 170-வது திரைப்படம். இத்திரைப்படத்தை தயாரிக்க போவதாக லைகா நிறுவனம் அறிவித்திருந்தது.
அதன் பிறகு இந்த படத்தை குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது ஒரு சூப்பர் செய்தி வைரலாகி வருகிறது.
அதாவது, 'தலைவர் 170' திரைப்படத்தில், ரஜினிகாந்த் ஒரு போலீஸ் வேடத்தில் நடிக்கப்போகிறார் என்றும், ஒரு முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்றும் ஊடக செய்திகள் கூறுகின்றன.
ரஜினிகாந்த் இதுவரை தன்னுடைய திரை வரலாற்றில் முஸ்லிம் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்ததில்லை எனவும் தெரியவருகிறது.
card 2
<strong></strong>கமாருதீன் முதல் மாணிக்க பாஷா வரை:
ரஜினியும் கமலும் இணைந்து நடித்த ஒருசில படங்களில், பிரபலமான படம் அலாவுதீனும், அல்புத விளக்கும். அதில், பாரசீக நாட்டின் படைத்தளபதி கமாருதீன் வேடத்தில் ரஜினி நடித்திருப்பார்.
ரஜினிகாந்த், பாட்ஷா திரைப்படத்தில், மாணிக் பாட்ஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பிறப்பால் இந்துவாக இருந்தாலும், மறைந்த நண்பன் மேல் இருக்கும் பிரியத்தால், மாணிக்கம் என்ற தனது பெயரை, மாணிக் பாஷா என மாற்றி வைத்துக்கொள்வார்.
அதேபோல, சமீபத்தில் வெளியான 'பேட்ட' திரைப்படத்திலும், அவர் முஸ்லிம் வீட்டில் வளரும் கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார்.
தற்போது, அடுத்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து செய்தி வெளியானதும் , அவரின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
'தலைவர் 170 ' படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் தான் இசையமைக்க போகிறார்.