
ஆகஸ்ட் 22 முதல் அமேசான் பிரைம் வீடியோவில்; தலைவன் தலைவி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் ஆகஸ்ட் 22, 2025 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. பாண்டிராஜ் எழுதி இயக்கிய இந்தப் படம் ஜூலை 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. முன்னணி இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி முதல்முறையாக இணைந்த இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்து சஸ்பென்ஸ் நிலவி வந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) சமூக ஊடக அறிவிப்பின் மூலம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி வெளியீட்டை உறுதிப்படுத்தியது.
பல மொழிகள்
ஓடிடியில் பல இந்திய மொழிகளில் வெளியீடு
ஆகாசவீரன் மற்றும் பேரரசியுடன் இரண்டு முறை காதலிக்கத் தயாராகுங்கள் என்ற தலைப்புடன் ஒரு விளம்பர போஸ்டரை அமேசான் பிரைம் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டது. இந்தப் படம் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்படுகிறது. இது பரந்த பார்வையாளர்களுக்கு அதன் வரம்பை விரிவுபடுத்துகிறது. இந்த படம் காதல், திருமணம் மற்றும் திருமணத்திற்கு பிந்தைய குடும்ப உறவில் உள்ள சிக்கல்களை அடிப்படையாக வைத்து நகைச்சுவையுடன் எடுக்கபட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரவிருக்கும் ஓடிடி வெளியீட்டின் மூலம், படம் தென்னிந்திய சந்தையைத் தாண்டி அதன் ரசிகர் பட்டாளத்தை விரிவுபடுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.