விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது
செய்தி முன்னோட்டம்
விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முதல் பாடலான 'தாயே தாயே மகளென வந்தாய்' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.
இப்பாடலை பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். வைரமுத்து இதற்கு வரிகளை எழுதியுள்ளார்.
குரங்கு பொம்மை படத்தின் இயக்குநரான நிதிலன் சாமிநாதன் இப்படத்தையும் இயக்கியுள்ளார். அஜனீஷ் லோக்நாத் என்பவர் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
மகாராஜா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது
#Maharaja First Single Premiere at Dubai Glimpse
— Trendswood (@Trendswoodcom) June 8, 2024
Film Releasing In Theatres On June 14
pic.twitter.com/n13VvLRU9G