LOADING...
தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் 'தாய் கிழவி', வசூல் விவரம் என்ன?
தாய்கிழவி தமிழ் திரைப்படம்

தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் 'தாய் கிழவி', வசூல் விவரம் என்ன?

எழுதியவர் Prasanna
Mar 09, 2026
07:52 pm

செய்தி முன்னோட்டம்

பெரிய நடிகர்களின் படங்கள் அதிகளவில் திரைக்கு வராத இந்த நேரத்தில், சிறிய இயக்குநர்களின் கதைக்களத்தை மையமாகக் கொண்ட மிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி திரைப்படம். அறிமுக இயக்குமர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் இன்று (மார்ச் 9) 11ம் நாளாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

தமிழ் சினிமா

10 நாட்களில் பலே வசூல்

இரண்டு வார இறுதிகளைக் கடந்திருக்கும் நிலையில் கடந்த 10 நாட்களில் மொத்தமாக ரூ.35.48 கோடி வசூல் செய்துள்ளது தாய்க்கிழவி. வெளியான முதல் நாள் ரூ.2.65 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தாலும், வாய்மொழியாக நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்த நாட்களில் ரூ.5 கோடி மற்றும் ரூ.6.15 கோடி வசூல் செய்து முதல் வார இறுதியில் ரூ.13 கோடியை ஈட்டியது இந்தத் திரைப்படம். அடுத்த சில வாரங்களுக்கு தமிழ் சினிமாவில் பெரிய திரைப்படங்களின் வெளியீடு எதுவும் இல்லாத நிலையில், தாய்க்கிழவியின் வசூல் வேட்டை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement