
ஃபேன்சி நம்பருக்காக இத்தனை லட்சங்களா? நடிகர் சிரஞ்சீவியின் செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு படவுலகில் மட்டுமல்ல, கோலிவுட் வட்டாரத்திலும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஒரு சில படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்துள்ளார்.
அவர் தற்போது டொயோட்டா வெல்ஃபயர் என்ற புதிய சொகுசு காரை வாங்கியுள்ளார்.
அந்த வண்டியின் விலை கிட்டத்தட்ட 1 .2 கோடியாகும்.
ஆனால், தற்போது அது பிரச்னை அல்ல. அந்த காருக்காக, தான் ஆசைப்பட்ட '1111' என்ற ஃபேன்சி நம்பர் வாங்க ஆசைப்பட்டுள்ளாராம்.
ஃபேன்சி நம்பர் பெறுவதற்கு தனி கட்டணம் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
சிரஞ்சீவி தான் ஆசைப்பட்ட நம்பர் வாங்குவதற்காக 5 லட்ச ரூபாய் கட்டியுள்ளாராம்.
இந்த செய்தி கேட்டு, அவரின் ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
Embed
சிரஞ்சீவியின் புதிய கார்
5 லட்சம் கொடுத்து காருக்கு பேன்சி நம்பர் வாங்கிய சிரஞ்சீவி #Chiranjeevi #car #fancynumber https://t.co/kNy4KBY8pT pic.twitter.com/EFmOtNRYvl— Dinamalar Cinema (@dinamalarcinema) April 13, 2023