Page Loader
அரண்மனை 4 -இல் தமன்னா மற்றும் ராஷி கன்னா நடிக்க போவதாக தகவல்
அரண்மனை 4ல் சுந்தர் சி-க்கு ஜோடியாக கமிட் ஆகி உள்ள நடிகைகள்!

அரண்மனை 4 -இல் தமன்னா மற்றும் ராஷி கன்னா நடிக்க போவதாக தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 01, 2023
06:22 pm

செய்தி முன்னோட்டம்

ஏற்கனவே 3 பாகங்களை எடுத்து வெற்றி கண்ட இயக்குனர் சுந்தர்.சி, தற்போது அடுத்த பாகத்தை எடுக்க போகிறார். ஆம், அரண்மனை 4 படவேலைகளை துவங்கி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முதல் மூன்று பாகத்தில், பேயையும், கிளாமரையும் அடித்து துவைத்த சுந்தர்.சி, நான்காம் பாகத்தில், புதிய நாயகிகளை இறக்கவுள்ளார் என தகவல். தேவி படம் மூலம் பேய் கதைகளுக்கு பரிச்சயமான தமன்னாவும், அரண்மனை 3 -ஆம் பக்கத்தில் நடித்திருந்த ராஷி கண்ணாவும் இந்த படத்தில் நடிக்க போகிறார்கள். ஏற்கனவே விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து கால்ஷீட் பிரச்னை காரணமாக விலகிவிட்ட நிலையில், சுந்தர்.சி-யே நடிக்க போவதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அரண்மனை 4

விரைவில் துவங்கவிருக்கும் படப்பிடிப்பு

அரண்மனை படத்தின் படப்பிடிப்பு, இந்த வாரம் துவங்கும் எனவும். அதற்கு முன்னர் அறிவிப்புகள் வெளிவரும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்துக்கான மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காபி வித் காதல் படம் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில், இந்த படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்தவுள்ளார் இயக்குனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. அரண்மனை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், தன்னுடைய கனவு படமான சங்கமித்ரா படத்தின் வேலைகளை தொடங்க போகிறார் சுந்தர். சி. வரலாற்று படமாக எடுக்கவிருக்கும் சங்கமித்ரா படத்தில், விஷால் மற்றும் ஆர்யா நடிக்கப்போவதாகவும். இவர்களுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கப்போவதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.