Page Loader
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை
திரைப்பட டிக்கெட் விலையை உயர்த்த அனுமதி கோரியுள்ளது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்

தமிழ்நாட்டில் திரையரங்குகளில் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 04, 2023
05:59 pm

செய்தி முன்னோட்டம்

அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் தியேட்டர் டிக்கெட் விலை சற்றே குறைவுதான். எனினும், மல்டிப்ளெஸ் திரையரங்குகளில் விற்கப்படும் பாப்கார்ன் மற்றும் பார்க்கிங் கட்டணம் சற்றே கூடுதலாகவே உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வரும் வேளையில், திரையரங்குகளின் டிக்கெட் விலையை உயர்த்த அனுமதி கோரியுள்ளது, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம். இவர்கள், தமிழக அரசிடம் அனுமதி கோரிய கடிதம், தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு ₹250 ஆகவும், AC திரையரங்குகளுக்கு ₹200 ஆகவும், Non-AC திரையரங்குகளுக்கு ₹120 ஆகவும் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் இத்தகைய கோரிக்கை விடுத்திருப்பது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post