Page Loader
ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள் - பகுதி 2 
வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள் - பகுதி 2

ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள் - பகுதி 2 

எழுதியவர் Arul Jothe
Jun 05, 2023
09:02 am

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டில் வீரன், காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம், போர் தொழில் என இந்த மாதம் திரையரங்குகளில் வெளியான மற்றும் வெளியாகவிருந்த படங்களின் பட்டியலை பார்த்தோம். மீதம் இருக்கும் படங்களின் விவரங்களையும் காணலாம். டக்கர்: கார்த்திக் கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'டக்கர்'. படம் ஜூன் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது மற்றும் படத்தில் திவ்யன்ஷா, அபிமன்யு சிங், முனிஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் டிராமாவாக இருக்கும் இப்படம் சித்தார்த்தை வித்தியாசமான பரிமாணத்தில் காட்டுகிறது.

Movie release 

வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள் - பகுதி 2

மாமன்னன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று 'மாமன்னன்'. படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை. அரசியல் கதைக்களமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஃபஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. உன்னால் என்னால்: இது முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாகும். இதை ஏ ஆர் ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களில் சோனியா அகர்வால் மற்றும் ரவி மரியா நடித்துள்ளனர். ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன் பேனரில் ராஜேந்திரன் சுப்பையா இந்தப் படத்தைத் தயாரித்தார். படத்திற்கு இசை ரிஸ்வான்.