Page Loader
இந்த வாரம் ஒடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் படங்கள் இதோ! 
ஒடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் படங்கள்

இந்த வாரம் ஒடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் படங்கள் இதோ! 

எழுதியவர் Arul Jothe
Jun 08, 2023
09:33 am

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியலை காணலாம். விமானம்: சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள 'விமானம்' என்ற திரைப்படம் வரும் வெள்ளிக் கிழமையன்று வெளியாக உள்ளது. விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற தனது மகனின் கனவை தந்தை சமுத்திரக்கனி நிறைவேற்றினாரா இல்லையா என்ற கதை தான் இந்த படம். மேலும், சமுத்திரக்கனி நடித்திருப்பதால் நிச்சயம் ரசிகர்களின் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டக்கர்: இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள அதிரடி திரைப்படம் 'டக்கர்'. நீண்ட இடைவெளிக்கு பிறகு சித்தார்த் நடித்திருக்கும் திரைப்படம் இது. இந்த படமும் வரும் வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சித்தார்த், யோகி பாபு, திவ்யன்ஷா உள்பட பலர் முக்கிய வேடங்களில் படத்தில் நடித்துள்ளனர்.

Movie release

OTTயில் வெளியாகும் 'கஸ்டடி' 

போர் தொழில்: சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் 'போர் தொழில்' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக உள்ளது. போர் தொழில் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது. கஸ்டடி: படத்தில் கடமை தவறாத கடைநிலைக் காவலராக நடித்துள்ளார் நடிகர் நாக சைதன்யா. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் க்ரித்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, சரத்குமார் என பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். 'கஸ்டடி' திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில், வரும் ஜூன் 9ம் தேதி அன்று, தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் வெளியாகிறது.