இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களின் பட்டியல்
சென்ற வாரமும், தமிழ் புத்தாண்டு வாரமும், பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆனதால், இந்த வாரம் ஒரே ஒரு தமிழ் திரைப்படம் தான் திரையரங்கில் வெளியாகவிருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில், உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் தான் அது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள இந்த திரைப்படம், இந்த வாரம், வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது. பலரும் அந்த படத்தை காண ஆவலுடன் காத்திருக்கும் இந்த நேரத்தில், படத்தை ப்ரொமோட் செய்வதற்கு, படக்குழு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். படத்தின் டிக்கெட் முன்பதிவு இரு தினங்களுக்கு முன்னர் துவங்கியது.
இந்த வார ஓடிடி வெளியீடு
பத்து தல: இந்த வாரம், சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படம், ஏப்ரல் 27 அன்று, அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகப்போகிறது. படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக ஓடவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சிம்புவின் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். தசரா: நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பான்இந்தியா படமாக வெளியான தசரா, கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படமும் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில், வரும் ஏப்ரல் 27 அன்று வெளியாகவிருக்கிறது.