ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள் பட்டியல்
செய்தி முன்னோட்டம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அவற்றின் பட்டியல் இதோ:
ருத்ரன்: ராகவா லாரன்ஸ் முதல் முறையாக பிரியா பவனிஷங்கருடன் இணைந்திருக்கும் இந்த படத்தை, 'பைவ் ஸ்டார்' கதிரேசன் இயக்குகிறார். படத்தின் முதல் பாடலான, 'பாடாத பாட்டெல்லாம்' ஹிட் ஆனதை அடுத்து, படத்திற்கு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
சொப்பன சுந்தரி: ஐஸ்வர்யா ராஜேஷ் தான், கதையின் நாயகி. இந்த படத்தை, எஸ்.ஜி.சார்லஸ் என்பவர் இயக்கியுள்ளார்.
திருவின் குரல்: வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் அருள்நிதியின் அடுத்த ரிலீஸ் இது. அருள்நிதியுடன், பாரதிராஜா நடிக்கிறார். படத்தின் அறிவிப்பு வெளியானது முதல், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை, ஹரிஷ் பிரபு இயக்கியிருக்கிறார்.
தமிழ் திரைப்படங்கள்
சமந்தா நடிப்பில் 3D -யில் வெளியாகப்போகும் சாகுந்தலம்
யானை முகத்தான்: யோகி பாபு நாயகனாக நடிக்க, ஊர்வசி, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தை, ரெஜிஷ் மிதிலா இயக்கியுள்ளார்.
சாகுந்தலம்: சமந்தா ரூத் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச கதை. படத்தின் கரு அனைவர்க்கும் தெரிந்ததாகையால், படத்தின் கிராபிக்ஸ் மற்றும் சமந்தாவிற்காக இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
தமிழரசன்: பிச்சைக்காரன் 2 வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், விஜய் ஆண்டனியின் அடுத்த அறிவிப்பான தமிழரசன் முதலில் திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தை, பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.
ரிப்பப்பரி: 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு, பொறுமையாக கதைகளை தேர்வு செய்து, மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ரிப்பப்பரி. இந்த படத்தை, அருண் கார்த்திக் இயக்கியுள்ளார்.