விஷால் நடிக்கும் 'ரத்னம்' திரைப்படத்தின் ஆக்ரோஷமான போஸ்டர்கள் வெளியானது
நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ஹரி மூன்றாவது முறையாக இணையும் #விஷால்34 திரைப்படத்திற்கு, 'ரத்னம்' என்று பெயரிடப்பட்டிருப்பதாக நேற்று தகவல் வெளியாகியது. இந்நிலையில், தற்போது 'ரத்னம்' திரைப்படத்தின் போஸ்ட்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. சாமி-2 படத்திற்கு பிறகு, அருண் விஜய் நடிப்பில் 'யானை' என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ஹரி, தற்போது மீண்டும் நடிகர் விஷாலுடன் இணைந்துள்ளார். இயக்குநர் ஹரியும் விஷாலும் இதற்கு முன்பு, 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' ஆகிய திரைப்படங்களில் இணைந்து பணி புரிந்திருக்கின்றனர். விஷாலின் 34வது படமான ரத்னத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும், ப்ரியா பவானி சங்கர், யோகிபாபு, சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.