அடுத்த செய்திக் கட்டுரை

பாலிவுட் நடிகருடன் டேட்டிங் சென்ற தமன்னா - வைரலாகும் வீடியோ!
எழுதியவர்
Siranjeevi
Apr 25, 2023
06:21 pm
செய்தி முன்னோட்டம்
கோலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா பாலிவுட்டில் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.
அவ்வப்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தமன்னா அண்மையில் பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதேப்போல் சில நாட்களுக்கு முன்பு பார்டி ஒன்றில் அவருக்கு தமன்னா முத்தம் கொடுக்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
தற்போது வெளியான வீடியோவில் மும்பை ஹோட்டல் ஒன்றில் விஜய் வர்மாவுடன் தமன்னா டேட்டிங் சென்றுள்ளனர்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2-ம் பாகத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
அப்போது ஏற்பட்ட பழக்கம் தான் காதலாக மாறியுள்ளது என கூறப்படுகிறது.