2 வருட டேட்டிங்கிற்கு பிறகு காதலன் விஜய் வர்மாவை பிரிந்தாரா தமன்னா?
செய்தி முன்னோட்டம்
நடிகை தமன்னாவும், நடிகர் விஜய் வர்மாவும் இரண்டு வருட டேட்டிங்கிற்குப் பிறகு பிரிந்துவிட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரிவிற்கு பிறகும் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளனர் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் இது குறித்து இந்தியா டுடே டிஜிட்டலிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜோடி வாரங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டதாக பிங்க்வில்லாவும் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், அவர்கள் நல்ல நண்பர்களாகவும், ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் இருக்கவும் திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தி கூறியது.
காதல் பயணம்
தமன்னா- விஜய் வர்மாவின் காதல் பயணம்
2023 ஆம் ஆண்டு லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெளியானபோது தமன்னாவும், விஜய் வர்மாவும் காதல் வயப்பட்டதாக தங்கள் உறவைப் பற்றிப் பகிரங்கப்படுத்தினர்.
ஒரு தனியார் ஊடக பேட்டியில் விஜய் வர்மா தங்கள் பிணைப்பை ஒருபோதும் மறைக்கவில்லை என்றாலும், அவர்கள் தங்கள் தனியுரிமையை நேசித்ததாக வெளிப்படுத்தினார்.
இருவரும் அவ்வப்போது தங்கள் துணையை உண்மையிலேயே ரசிப்பதில், தங்கள் காதலை மறைப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று முடிவு செய்திருந்தனர்.
இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் வதந்திகள் பரவிய நிலையில் இந்த பிரேக்-அப் செய்தி இந்த ஜோடியின் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. எனினும் இது குறித்து இரண்டு நடிகர்களிடமிருந்து அதிகாரபூர்வ அறிக்கை ஏதும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.