LOADING...
சூர்யாவின் 'கருப்பு' பட ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 9 மணி சிறப்பு காட்சிகள் ரத்து
'கருப்பு' படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன

சூர்யாவின் 'கருப்பு' பட ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 9 மணி சிறப்பு காட்சிகள் ரத்து

எழுதியவர் Venkatalakshmi V
May 14, 2026
07:03 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று (மே 14, 2026) உலகம் முழுவதும் வெளியாகிறது. ஆனால், ரிலீஸ் தினமான இன்று காலை ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு அனுமதி அளித்திருந்த இன்று காலை 9 மணி சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த திடீர் ரத்து குறித்து 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார். அதில் அவர்,"தவிர்க்க முடியாத காரணங்களால் 'கருப்பு' திரைப்படத்தின் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்காக அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பின்னணி

பின்னணி என்ன?

காட்சி ரத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது கேடிஎம் (KDM) உரிமம் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு படத்தின் இயக்குனர் RJ பாலாஜி தனது பதிவில் தயாரிப்பாளர்கள் உரிய நேரத்தில் படத்தை வெளியிட தங்களால் இயன்ற முயற்சிகளை செய்தி வருவதாகவும், படம் நிச்சயம் வெளியாகும் எனவும் கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சூர்யாவின் படத்தை திரையில் காண அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள், இந்தத் திடீர் அறிவிப்பால் ஏமாற்றமடைந்துள்ளனர். எனினும், நண்பகல் மற்றும் மாலைக் காட்சிகள் திட்டமிட்டபடி திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement