LOADING...
சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு; ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தயாராகும் கருப்பு முதல் பாடல் வெளியீடு

சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு; ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தயாராகும் கருப்பு முதல் பாடல் வெளியீடு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 20, 2025
02:43 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி மற்றும் நடிகர் சூர்யா மற்றும் கூட்டணியில் உருவாகி வரும் கருப்பு திரைப்படத்தின் முதல் பாடல், தீபாவளியை முன்னிட்டு திங்கட்கிழமை (அக்டோபர் 20) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, சுவாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆன்மிகப் பின்னணியில் உருவாகும் ஒரு ஆக்ஷன் கதையாக இப்படம் இருக்கும் எனத் தெரிகிறது.

தாமதம்

படம் ரிலீஸாவதில் தாமதம்

முதலில் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையாததால், கருப்பு திரைப்படம் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் திரைக்கு வர வாய்ப்புள்ளது. இன்று வெளியான முதல் சிங்கிள் பாடல், சூர்யாவின் அறிமுகப் பாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்து பாடியுள்ள இப்பாடலை, கானா முத்துவும் இணைந்து பாடியுள்ளார். விஷ்ணு எடவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். கிராமத்து வாசனையுடன், சமகாலத்தின் ட்ரெண்டிங் வார்த்தைகளைப் பயன்படுத்தி உருவாகியுள்ள இந்தப் பாடல், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. சூர்யாவின் கடைசியாக வெளிவந்த கங்குவா மற்றும் ரெட்ரோ எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், ஆர்ஜே பாலாஜியின் தனித்துவமான கதை சொல்லும் பாணி, சூர்யாவிற்கு வெற்றியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.